×

நெட் தேர்வு ஜூன் 18க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் இளைநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை பெறுவதற்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் நெட் எனப்படும் தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். வருகிற ஜூன் 16ம் தேதி நடைபெற இருந்த நெட் தேர்வு ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். யூபிஎஸ்சி தேர்வு நடைபெறும் நாளில் வருவதாக தேர்வு எழுதுவோர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post நெட் தேர்வு ஜூன் 18க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,NET ,National Examinations Agency ,Dinakaran ,
× RELATED யுஜிசி-நெட் தேர்வுகள் ஜூன் 18-க்கு ஒத்திவைப்பு..!!